
தொழில்நுட்ப உலகை தனது ஒவ்வொரு புதிய கண்டுபிடிப்பின் மூலமாகவும் பிரம்மிப்பில் ஆழ்த்தி வரும் ஆப்பிள் நிறுவனம் நவீன தொழில்நுட்ப உலகின் அடுத்தகட்ட கண்டுபிடிப்பான ஸ்மார்ட் வாட்சை(apple smart watch) அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் கடந்த 9-ம் தேதி அறிமுகப்படுத்தியது.
ஆப்பிள் ஸ்மார்ட் வாட்சில் போன் அழைப்புகளை ஏற்க முடியும். இமெயில் பார்க்கலாம். வைபை, புளூடூத் 4.0, ஆக்ஸிலரோ மீட்டர், புதிய டிஜிட்டல் டச் தொழில் நுட்பம் என ஏராளமான வசதிகள் உள்ளன. ஐ.ஓ.எஸ். 8.2 இயங்குதளத்துடன் உள்ள இந்த ஸ்மார்ட் வாட்சை ஆப்பிள் ஐபோன் 5 முதல் அனைத்து ஆப்பிள் போன்களுடனும் இணைத்து பயன்படுத்தலாம். ஆப்பிள் ஸ்டோரில் இருந்து அப்களையும் டவுன்லோடு செய்து நிறுவிக்கொள்ளலாம்.
இந்த ஸ்மார்ட் வாட்ச்கள் ஆஸ்திரேலியா, அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் ஏப்ரல் 24ம் தேதி முதல் விற்பனைக்கு கிடைக்கும். ஏப்ரல் 10ம் தேதி முதல் ஆர்டர் பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 38 மி.மீ. 42 மி.மீ அளவுகளில் உள்ள ஆப்பிள் வாட்ச்சின் விலை 549 அமெரிக்க டாலராகவும், ஆப்பிள் வாட்ச் ஸ்போர்ட்டின் விலை 349 அமெரிக்க டாலராகவும், ஆப்பிள் வாட்ச் எடிசன் மாடல்களில் ஆரம்ப விலை 10 ஆயிரம் அமெரிக்க டாலரிலும் தொடங்குகின்றது.

0 comments :
Post a Comment